பி.டி.பி.ஆர்.-உடன் தொடர்பில்லாதத் திட்டங்களை ஒத்திவையுங்கள் – மஸ்லி வலியுறுத்து

ஜூன் 13 மற்றும் 14 ஆகியத் தேதிகளில் பள்ளி அமர்வு மீண்டும் திறக்கப்படும்போது, இல்லமிருந்து கற்பித்தல் மற்றும் கற்றல் (பி.டி.பி.ஆர்.) அமர்வுடன் தொடர்பில்லாதத் திட்டங்களைச் செயல்படுத்துவதை ஒத்திவைக்குமாறு பக்காத்தான் ஹராப்பான் (பி.எச்.) கல்விக் குழு கல்வியமைச்சை வலியுறுத்தியுள்ளது. "இந்தப் பிடிபிஆர் அல்லாதத் திட்டங்கள் இப்போதைக்கு ஒத்திவைக்கப்பட வேண்டும்," என்று…

இன்று 5,271 புதிய நேர்வுகள், 82 மரணங்கள்

கோவிட் 19 | நாட்டில் இன்று, 5,271 கோவிட் -19 புதிய நேர்வுகள் பதிவாகியுள்ளதாக சுகாதாரத் தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார். இது தொடர்ச்சியாக நான்கு நாட்களில் பதிவான புதிய நேர்வுகளின் சரிவு மற்றும் மூன்று வாரங்களில் மிகக் குறைந்த எண்ணிக்கை ஆகும். இருப்பினும்,…

சைபர்ஜெயாவில் நடந்த சோதனையில் 156 வெளிநாட்டினர் கைது

சைபர்ஜெயாவில், ஒரு சட்டவிரோதக் குடியிருப்பில் நடந்த சோதனை நடவடிக்கையில், 156 வெளிநாட்டினரைக் குடிநுழைவுத் துறை நேற்று இரவு தடுத்து வைத்தது. இரவு 11 மணிக்கு நடந்த அந்த நடவடிக்கையில், 12 பெண்கள் மற்றும் இரண்டு குழந்தைகள் உட்பட இந்தோனேசியா, வங்களாதேசம், பாகிஸ்தான், மியான்மர் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளில்…

சுகாதார நிலையைப் புதுப்பிக்காததற்காக தண்டம் – இரத்து செய்ய எம்கேஎன்…

மைசெஜாத்தெரா விண்ணப்பத்தில் தங்கள் சுகாதார நிலையைப் புதுப்பிக்கவில்லை எனக் கூறி 31 தொழிலாளர்களுக்கு விதிக்கப்பட்ட தண்டங்களை இரத்து செய்யுமாறு தேசியப் பாதுகாப்பு மன்றம் (எம்கேஎன்) உத்தரவிட்டுள்ளது. எம்கேஎன் தலைமை இயக்குநர் மொஹமட் ராபின் பசீர் கூறுகையில், வெளிநாடுகளுக்குச் சென்றவர்கள் அல்லது கோவிட் -19 நோயாளிகளுடன் தொடர்பு கொண்டவர்கள் மட்டுமே…

எடிக்ட் : தடுப்புக்காவல் மரண வழக்குகளைக் கையாள கொரோனர் நீதிமன்றம்…

தடுப்புக்காவல் மரணம் மற்றும் அதிகார அத்துமீறலை ஒழிக்கவும் (எடிக்ட்) என்ற மனித உரிமைகள் குழு, கொரோனர் நீதிமன்றங்களுக்கு அதிகாரம் அளிக்கவும், அந்த நீதிமன்றங்கள் சம்பந்தப்பட்ட புதியச் சட்டங்களை இயற்றவும் அரசாங்கத்திற்கு அழைப்பு விடுத்தது. எந்தவொரு அரசியல் கூறுகளும் பாகுபாடும் இல்லாமல், நீதிமன்றங்கள் மூலமாக தவிர, தடுப்புக்காவல் மரண வழக்குகளுக்கு…

கோவிட் -19 தொற்று விகிதம் : ஏப்ரலுக்குப் பிறகு முதல்…

மலேசியாவில், கோவிட் -19 நோய்த்தொற்று விகிதம், ஏப்ரல் மாதத்திலிருந்து முதல் முறையாக 1.0 மட்டத்திற்குக் கீழே குறைந்தது. கடந்த வாரத்தில் தொற்று வீதம் படிப்படியாகக் குறைந்து வருவது, தொற்றுநோய் பரவுதல் வீதம் குறைந்து வருவதைக் குறிக்கிறது. சுகாதாரத் தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா பகிர்ந்துள்ள தரவுகளின்படி,…

சாலைத் தடுப்புகளில் 10 வகையான கடிதங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் 

சாலைத் தடுப்புகளில் ஏற்றுக்கொள்ளப்படும் சர்வதேச வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சு (மிட்டி) உள்ளிட்ட, முகவர் மற்றும் அமைச்சுகளின் 10 அனுமதி கடிதங்களைப் போலீசார் பட்டியலிட்டுள்ளனர். தேசியக் காவற்படைத் தலைவர், அக்ரில் சானி அப்துல்லா சானி ஓர் அறிக்கையில், அங்கீகரிக்கப்பட்ட துறைகளின் அடிப்படையில், அனைத்து கடிதங்களும் தொழிலாளர்கள் வீடுகளுக்கும் அவர்களின்…

மைசெஜாத்தெரா’வில் சுகாதார நிலையைப் புதுப்பிக்கத் தவறினால் தண்டம்

உற்பத்தித் துறையில் பணிபுரிபவர்கள், மைசெஜாத்தெரா பயன்பாட்டில் தங்கள் உடல்நிலையைப் புதுப்பிக்கத் தவறினால் தண்டம் விதிக்கப்படலாம். கூடுதலாக, அவர்கள் பணிபுரியும் இடத்தில் நுழைய மைசெஜாத்தெரா பயன்பாட்டையும் பயன்படுத்தி இருக்க வேண்டும். பேராக்கில், அவர்களின் சுகாதார நிலையைப் புதுப்பிக்க தவறியதற்காக, 31 தொழிலாளர்களுக்கு முறையே RM1,500 முதல் RM2,000 வரை தண்டம்…

இன்று 6,241 புதிய நேர்வுகள், 87 மரணங்கள்

கோவிட் 19 | இன்று நாட்டில், 6,241 கோவிட் -19 புதிய நேர்வுகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. மேலும் இன்று, 87 மரணங்கள் புகாரளிக்கப்பட்டுள்ளன. இதுவரை இந்நோய்க்கு நாட்டில் மொத்தம் 3,378 பேர் பலியாகியுள்ளனர். சிலாங்கூர் (34) அதிக எண்ணிக்கையிலான இறப்புகளைப் பதிவுசெய்துள்ளது, ஜொகூர் (12), நெகிரி…

ஃபாஹ்மி : 8.6 விழுக்காடு மடிக்கணினிகள் விநியோகம் – தோல்வி…

அரசாங்கம் வாக்குறுதியளித்தபடி, 150,000 மடிக்கணினிகளை மாணவர்களுக்கு வழங்குவது சுமூகமாக நகர்வதாகத் தெரியவில்லை; ஆறாவது மாதத்தில் நுழைந்துள்ள நிலையில் 13,000-க்கும் குறைவானவையே விநியோகிக்கப்பட்டுள்ளன. இது குறித்து லெம்பா பந்தாய் நாடாளுமன்ற உறுப்பினர் ஃபாஹ்மி ஃபட்ஸில் கூறுகையில், கல்வி அமைச்சர் ராட்ஸி ஜிடினின் விநியோக விகிதம் 8.6 விழுக்காடானது, தேர்வு தரங்களின்…

பிஎச் : சீனாவிடம் விளக்கம் கோரும் உரிமை மலேசியாவுக்கு உண்டு

மே 31-ம் தேதி, கோத்த கினாபாலு விமானத் தகவல் பிராந்தியத்தில் (எஃப்.ஐ.ஆர்) நுழைந்த சீன மக்கள் குடியரசு விமானப்படையின் (பி.எல்.ஏ.ஏ.எஃப்) 16 விமானங்கள் தொடர்பான விவகாரத்தில், இரு தரப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்காத்தான் ஹராப்பான் (பி.எச்) தெரிவித்தது. ஒரு கூட்டு அறிக்கையில், சீனாவிடமிருந்து நியாயமான விளக்கம்…

அமைச்சர் : பி40 மாணவர்களுக்குக் கிட்டத்தட்ட 13,000 சாதனங்கள் வழங்கப்பட்டுள்ளன

பி40 குழுவைச் சார்ந்த பள்ளி குழந்தைகளுக்கு, மடிக்கணினிகள் உட்பட 13,000 சாதனங்களைக் கல்வி அமைச்சு இதுவரை விநியோகித்துள்ளதாக அதன் அமைச்சர் மொஹமட் ராட்ஸி முகமட் ஜிடின் தெரிவித்துள்ளார். 150,000 மடிக்கணினிகளை இலக்காகக் கொண்ட மீதமுள்ள கையளிப்பு, செப்டம்பர் 2021 இறுதிக்குள் முடிக்கப்படும் என்றும் ராட்ஸி கூறினார். 95 பள்ளிகளுக்கு,…

‘ஜிஇ15-க்கான பி.எச். சின்னம் பற்றி விவாதிக்கும் நேரம் இதுவல்ல’

கோவிட் -19 தொற்றுநோயைச் சமாளிக்க, நாடு இன்னமும் சிரமப்பட்டு வரும் இந்த நேரத்தில், 15-வது பொதுத் தேர்தலில் (ஜிஇ15) பக்காத்தான் ஹராப்பான் (பி.எச்.) எந்தச் சின்னத்தைப் பயன்படுத்துவது என்பது குறித்து விவாதிக்க இது சரியான நேரம் அல்ல என்று டிஏபி அமைப்புச் செயலாளர் அந்தோனி லோக் கருதுகிறார். கடந்த…

2021 எஸ்.பி.எம். அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறும்

மலேசியக் கல்விச் சான்றிதழ் (எஸ்.பி.எம்) 2021 தேர்வு, அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறும் என்று கல்வி அமைச்சு இன்று அறிவித்துள்ளது. வாய்மொழி மற்றும் நடைமுறை அறிவியல் சோதனைகள் பிப்ரவரி 2022-இல் செயல்படுத்தப்படும் என்றும் மூத்தக் கல்வி அமைச்சர் டாக்டர் ராட்ஸி ஜிடின் தெரிவித்தார். தற்போது நாட்டைப் பாதித்து…

பி.டி.பி.ஆர். 25 நாள்களுக்குத் தொடரும்

ஜூன் 13 மற்றும் 14 ஆகியத் தேதிகளில், பள்ளி அமர்வு மீண்டும் திறக்கப்படும் போது, இல்லமிருந்து கற்பித்தல் மற்றும் கற்றல் (பி.டி.பி.ஆர்.) பள்ளி அமர்வை அரசாங்கம் தொடரும். கோவிட் -19 நிலைமையைப் பொறுத்து, நேருக்கு நேர் பள்ளி அமர்வுகளை நடத்துவதன் தகுதியை அரசாங்கம் மறு மதிப்பீடு செய்வதற்கு முன்னர்,…

இன்று 7,452 புதிய நேர்வுகள், 109 மரணங்கள்

கோவிட் 19 | இன்று நாட்டில், 7,452 கோவிட் -19 புதிய நேர்வுகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது. மேலும், இன்று 109 மரணங்கள் புகாரளிக்கப்பட்டுள்ளன. இதுவரை இந்நோய்க்கு நாட்டில் மொத்தம் 3,291 பேர் பலியாகியுள்ளனர். இன்று 6,105 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அவசரப் பிரிவில் 886…

‘அரசாங்கம் செலவு செய்யாமல், முழு கடன் ஒத்திவைப்பு சாத்தியப்படாது’

இந்த வாரத் தொடக்கத்தில், தான் தெரிவித்த கருத்துகளுக்கு மாறாக, அவசரக் காலச் சட்டத்தைப் பயன்படுத்தி, வங்கிகளை ஒரு முழுமையான கடன் ஒத்திவைப்புக்கு அனுமதிக்குமாறு புத்ராஜெயா கட்டாயப்படுத்தலாம் என்பதை நிதியமைச்சர் தெங்கு ஜஃப்ருல் அப்துல் அஜீஸ் ஒப்புக் கொண்டார். இருப்பினும், இந்த நடவடிக்கை அரசாங்கத்திற்குச் சுமையாக இருக்கும் என்றும், பெரிய…

சீனாவின் புதிய தடுப்பூசி மலேசியாவில் பரிசோதிக்கப்படுகிறது

சீனாவில் தயாரிக்கப்பட்ட மற்றொரு கோவிட் -19 தடுப்பூசியைப் பரிசோதிப்பதற்கான இடமாக, மலேசியா தேர்வு செய்யப்பட்டுள்ளது, இந்த முறை ஷென்சென் காங்தாய் உயிரியல் தயாரிப்புகள் கூட்டுறவு நிறுவனம் அதனைத் தயாரித்துள்ளது. சுகாதாரத் தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா, மூன்றாம் கட்ட மருத்துவ ஆய்வுக்குத் தேசிய மருந்து ஒழுங்குமுறை…

அஸ்மின் பதவி விலக வேண்டும் – பி.கே.ஆர். இளைஞர் ஆதரவு

தேசியக் கூட்டணியின் நிர்வாக அமைச்சர்களாக மாறிய, இரண்டு முன்னாள் கட்சித் தலைவர்களைப் பி.கே.ஆர். இளைஞர் அணி (ஏ.எம்.கே.) குறிவைத்து வருகிறது. பி.கே.ஆர். இளைஞர் அணியின் இன்றைய வருடாந்திர மாநாட்டில், கட்சியின் இளைஞர் அணி தலைவர் அக்மல் நசீர், தனது கொள்கை உரையில், மொஹமட் அஸ்மின் அலி மற்றும் ஸூரைடா…

தேர்தல் நடத்த அம்னோ விண்ணப்பம் – எம்.கே.என். நிராகரித்தது

கோவிட் -19 நேர்வுகள் அதிகரித்து வரும் இச்சமயத்தில், இந்த மாதம் கட்சியின் தேர்தலை நடத்துவதற்கான அம்னோவின் விண்ணப்பத்தைத் தேசியப் பாதுகாப்பு மன்றம் (எம்.கே.என்) நிராகரித்தது. "தற்போதைய கோவிட் -19 நிலைமை இன்னும் மோசமாக இருப்பதால், முன்னதாகத் திட்டமிட்டப்படி கட்சித் தேர்தலை நடத்துவதற்கான அம்னோவின் விண்ணப்பத்தை எம்.கே.என். நிச்சயம் நிராகரிக்கும்,”…

சைம் டார்பி பெருந்தோட்ட நிறுவனம் மனித உரிமை வழக்கறிஞரை நியமித்தது

சைம் டார்பி பிளான்டேஷன் (எஸ்.டி.பி.) ஆஸ்திரேலிய மனித உரிமை வழக்கறிஞர் பேராசிரியர் ஜஸ்டின் நோலனை அந்நிறுவனத்தின் பங்குதாரர் மனித உரிமைகள் மதிப்பீட்டு ஆணையத்தின் உறுப்பினராக நியமித்துள்ளது. மார்ச் 2021-இல் அமைக்கப்பட்ட இந்த ஆணையத்தில், இம்பாக்ட் லிமிடெட்டின் நெறிமுறை வர்த்தக ஆலோசகர்கள் மற்றும் பெருந்தோட்ட ஆலோசனைக் குழு, நோலன் உட்பட,…

இன்று 7,748 புதிய நேர்வுகள், 86 மரணங்கள்

கோவிட் 19 | பி.கே.பி. 3.0 தொடங்கி 23 நாட்களாகிவிட்டன, ஆனால் தொற்று பரவல் குறைந்துள்ளதற்கான அறிகுறிகள் எதுவும் இல்லை. இன்று நாட்டில், 7,748 கோவிட் -19 புதிய நேர்வுகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. மேலும், இன்று 86 மரணங்கள் புகாரளிக்கப்பட்டுள்ளன. இதுவரை இந்நோய்க்கு நாட்டில் மொத்தம்…

கணபதி மரணம்: நிருபர்கள் மீதான விசாரணை விமர்சனங்களுக்குப் போலிசார் பதில்

கோம்பாக் போலிஸ் காவலில் இருந்தபோது மரணமடைந்த ஏ கணபதி சம்பந்தப்பட்ட விவகாரத்தில், ஊடக ஊழியர்களுக்கு எதிராக நடந்த விசாரணையை அதிகாரிகள் தற்காத்து வருகின்றனர். ஊடகக் கேள்விக்குப் பதிலளித்த சிலாங்கூர் காவல்துறைத் தலைவர், அர்ஜுனைடி மொஹமட், போலிஸ் புகார் இருப்பதால் காவல்துறை நடவடிக்கை எடுத்தது என்றார். எனவே, ஊடகவியலாளர்கள் பலியாகியுள்ளனர்…