பிடி இடைத் தேர்தல்: அன்வார் முன்நிலையில், அடுத்து ஈசா

  பிடி நாடாளுமன்ற இடைத் தேர்தல் குறித்து நடத்தப்பட்ட ஒரு மதிப்பீட்டில் அன்வார் இப்ராகிம் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு மிகப் பெரிதாகத் தெரிகிறது. இல்ஹாம் மையம் போர்ட் டிக்சன் தொகுதியில் நடத்திய அந்த ஆய்வில் 817 பேர் பங்கேற்றனர். அந்த ஆய்வின் முடிவில்  அன்வார் முன்நிலையிலும் அதற்கு அடுத்து…

இஆர்சி: அரசாங்கத் தலைவர்களும் தேர்தல் விதிமுறைகளை மீறுகிறார்கள்

தேர்தல் சீரமைப்புக் குழு(இஆர்சி)த் தலைவர் அப்துல் ரஷிட் அப்துல் ரஹமான், போர்ட் டிக்சன் இடைத் தேர்தல் பரப்புரைகளின்போது தற்காப்பு அமைச்சர் முகம்மட் சாபு, துணைப் பிரதமர் டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயில் உள்பட, பலர் தேர்தல் விதிமுறைகளை மீறியிருப்பதாகக் கூறினார். விதிமீறல்களில் அரசாங்க வசதிகளைப் பயன்படுத்திக் கொள்ளல்,…

குடியுரிமை இல்லாத மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் பதிந்துகொள்ள எளிய வழிமுறை

அரசாங்கப் பள்ளிகளில் தங்களைப் பதிந்துகொள்ள விரும்பும் குடியுரிமை இல்லாத மாணவர்களுக்கு அதற்கான வழிமுறைகள் எளிமைப்படுத்தப்படும் என்று கல்வி துணை அமைச்சர் தியோ நை சிங் கூறினார். கடந்த வாரம் நடந்த ஒரு கூட்டத்தில், அமைச்சு குடியுரிமை இல்லாத பிள்ளைகள் அவர்களின் பிறப்புச் சான்றிதழ், சுவீகார பத்திரங்கள் அல்லது நீதிமன்ற…

ஜாஹிட் 5-வது முறையாக எம்ஏசிசி வந்தார்

முன்னாள் துணைப் பிரதமரும் அம்னோ தேசியத் தலைவருமான ஜாஹிட் ஹமிடி, இன்று காலை காலை ஐந்தாவது முறையாக புத்ரா ஜெயாவிலுள்ள ஊழல்-தடுப்பு ஆணையத் தலைமையகம் வந்தார். வெண்ணிற சட்டை அணிந்து வெண்ணிற லெக்சஸ் காரில் காலை மணி 9.20 அளவில் அவர் எம்ஏசிசி தலைமையகம் வந்தடைந்தார். அமைதியாக, புன்னகை…

மலேசியா சீனாவின் கோரிக்கையை ஏற்காமல் உய்கோர் கைதிகளை விடுவித்தது

மலேசியா கடந்த ஆண்டு தடுத்து வைத்த தாய்லாந்திலிருந்து தப்பியோடி வந்த உய்கோர் முஸ்லிம்கள் 11 பேரை விடுவித்து துருக்கிக்கு அனுப்பி வைத்ததாக அவர்களின் வழக்குரைஞர் நேற்றுத் தெரிவித்தார். அவர்களை பெய்ஜிங் அனுப்பி வைக்குமாறு சீனா கேட்டுக்கொண்டதை மலேசியா பொருட்படுத்தவில்லை. இதனால் சீனாவுடனான உறவுகள் நலிவடையலாம். சீன -மலேசிய உறவுகள்…

அன்வார்: இது ரோஸ்மாவின் பை போல் இருக்கிறதே!

இன்று பிடி நாடாளுமன்ற இடைத் தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாள். பிடி பக்கத்தான் ஹரப்பான் வேட்பாளர் அன்வார் இப்ராகிம் காலை மணி 10 அளவில் குளோரி பீச் ரீசோர்ட், தாமான் தஞ்சோங்கில் நெகிரி செம்பிலான் பள்ளிகள் கூட்டுறவு கழகங்களின் வாணிக மேம்பாடு சிறப்பு திட்டம் என்ற நிகழ்ச்சியில் பங்கேற்க…

சாலை கட்டணம் இல்லாத சாலைகள் சாத்தியமல்ல, மகாதிர்

  சாலை கட்டணம் விதிக்கப்படாத நெடுஞ்சாலைகள் சாத்தியமல்ல என்று பிரதமர் மகாதிர் கூறுகிறார். சாலை கட்டணம் இல்லாத நெடுஞ்சாலை என்று வாக்குறுதி அளிக்கும் பக்கத்தான் தேர்தல் அறிக்கைக்கு தாம் எதிர்ப்பு தெரிவித்ததாக அவர் கூறினார். நாம் அரசாங்கம் அமைக்கப் போவதில்லை என்று நினைத்துக் கொண்டு தேர்தல் அறிக்கையைத் தயாரித்தோம்.…

அகோங் கூறியதை, வான் அஸிஸா வெளிபடுத்தியது முறையல்ல

14-வது பொதுத் தேர்தலுக்குப் பின்னர், மாட்சிமை தங்கிய மாமன்னர், சுல்தான் முகமட் V, தன்னைப் பிரதமர் பதவியை ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுகொண்டார் எனும் தகவலை, துணைப் பிரதமர் டாக்டர் வான் அஸிஸா வான் இஸ்மாயில் வெளிப்படுத்தியது முறையல்ல என்று ‘ஹிஸ்பா’ இயக்கத்தின் தலைவர் எஸாம் முகமட் நோர் தெரிவித்தார். “அரண்மனையில்…

ஜேபி தீபாவளி சந்தை : கட்டுப்படுத்தப்பட்ட வாடகை, அந்நிய நாட்டவர்க்கு…

ஜொகூர் பாரு தீபாவளி சந்தையில் அமைக்கப்படவுள்ள தற்காலிகக் கடைகளுக்கு, கட்டுப்படுத்தப்பட்ட வாடகையை நிர்ணயித்து உள்ளதாக மாநில மனிதவள, ஒற்றுமை மற்றும் பயனீட்டாளர் விவகாரத்துறை தலைவர் டாக்டர் எஸ் இராமகிருஷ்ணன் தெரிவித்தார். இன்று காலை, இஸ்கண்டார் புத்ரியில், அவரது அலுவலகத்தில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது அவர் இதனைத் தெரிவித்தார்.…

சில ஆட்சியாளர்கள் மகாதிர் பிரதமராவதைத் தடுக்க முயன்றார்களாம்

துணைப் பிரதமர் டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயில், பேரரசர் சுல்தான் ஐந்தாம் முகம்மட் பிரதமர் பதவியைத் தமக்குக் கொடுக்க முன்வந்த தகவலை வெளியிட்டதற்காக டாக்டர் மகாதிர் முகட்டின் ஊடக, தொடர்பு ஆலோசகர் காடிர் ஜாசின் அவரைப் பாராட்டினார். “மகாதிர் மீண்டும் அரசியல் களத்துக்குத் திரும்புவதைத் தடுக்க சில…

‘தூக்குத் தண்டனை இரத்துச் செய்யப்படுவதைத் தடுக்காதீர்’- எதிரணி எம்பிகளுக்கு, செனட்டர்களுக்கு…

தூக்குத் தண்டனை மற்றும் சித்திரவதையை எதிர்க்கும் மலேசிய அமைப்பு(மாட்பெட்), எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர்களும் செனட்டர்களும் தூக்குத் தண்டனையை இரத்துச் செய்யும் புத்ரா ஜெயாவின் திட்டத்தை ஆதரிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருக்கிறது. தூக்குத் தண்டனையை இரத்துச் செய்ய அமைச்சரவை எடுத்துள்ள முடிவு தூக்குத் தண்டனையை எதிர்நோக்கியுள்ள 1,267 பேருக்கு நல்ல…

ம.இ.கா உறுப்பினர்கள் ஏமாளிகள் அல்ல, முகமது ஈசாவுக்கு வாக்களிக்க! சேவியர்

  அம்னோ ம.இ.காவுக்கு தொடர்ந்து இழைத்துவரும் அநீதியை, இந்தியர்கள் நல்வாழ்வுக்கு ஏற்படுத்தியுள்ள  இடர்பாடுகளை போர்டிக்சன் ம.இ.கா உறுப்பினர்கள் மறந்து அம்னோவின் முன்னாள் முக்கியத் தலைவரும் போர்டிக்சன் இடைத்தேர்தல் சுயேச்சை வேட்பாளருமான  முகமது ஈசாவுக்கு வாக்களித்து அவர்களின் பொன்னான வாக்குகளை வீணடிக்கக் கூடாது  என்கிறார் கெஅடிலான் கட்சியின் தேசிய உதவித்…

ஆசியான் தலைவர்கள் கூட்டம் நடைபெறவுள்ள வேளையில் பாலியில் நிலநடுக்கம்

பாலி ஆசியான் தலைவர்கள் கூட்டத்துக்குத் தயாராகிக் கொண்டிருக்கும் வேளையில் சுற்றுலாவுக்குப் பேர்பெற்ற அத்தீவை ரிக்டர் கருவியில் 6.0 என்று பதிவான நில நடுக்கம் தாக்கியதில் மூவர் கொல்லப்பட்டனர், பல கட்டிடங்கள் சேதமடைந்தன. ஆசியான் தலைவர்கள் கூட்டம் மட்டுமல்லாமல் அனைத்துலக பண நிறுவனம் மற்றும் உலக வங்கியின் ஆண்டுக் கூட்டமும்…

லாபுவான் எம்பி அம்னோவிலிருந்து வெளியேறுவதை உறுதிபடுத்தினார்

  லாபுவான் அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர் ரோஸ்மான் ஒஸ்லி அக்கட்சியிலிருந்து வெளியேறி பார்டி வார்சான் சாபாவில் சேரப் போவதாக உலவிய வதந்தியை உறுதிப்படுத்தினார். அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தாம் வாரிசான் தலைமையிலான சாபா அரசாங்கத்துடனான உறவை வலுப்படுத்த விரும்புவதாகவும் லாபுவான் கூட்டரசு பிரதேசத்தை மேம்படுத்த விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.…

ஸாகிட் இன்றும் எம்எசிசியால் விசாரிக்கப்படுகிறார்

முன்னாள் துணைப் பிரதமர் அஹமட் ஸாகிட் ஹமிடி இன்று எம்எசிசி தலைமையகத்தில் அவரது வாக்குமூலத்தைத் தொடர்ந்து பதிவு செய்ய வந்துள்ளார். அவர் காலை மணி 9.15-க்கு வந்தார். அவரது மகள் சுமார் 10 நிமிடங்களுக்குப் பின்னர் அங்கு வந்து சேர்ந்தார். இன்றைய விசாரணை நேற்று நடந்த விசாரணையின் தொடர்ச்சி…

எஸ்.இலட்சுமணன், ‘செடிக்’ புதிய பொறுப்பாளர் – வேதமூர்த்தி அறிவிப்பு

இந்திய சமூக-பொருளாதார மேம்பாட்டுப் பிரிவின் (செடிக்) புதிய தலைமை இயக்குநராக எஸ்.இலட்சுமணன் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் இந்நியமனம் அக்.12-ஆம் நாள் முதல் நடைமுறைக்கு வருகிறதென்றும் பிரதமர் துறை அமைச்சர் பொன்.வேதமூர்த்தி அறிவித்துள்ளார். தற்பொழுது தகவல்-பல்லூடக அமைச்சின் பன்னாட்டுப் பிரிவில் செயலாளராக இருக்கும் இலட்சுமணன், நிருவாக மற்றும் அரசதந்திர சேவையில் நீண்ட அனுபவம்…

அம்னோ லாபுவான் எம்பி விலகப் போவதாக வதந்தி

  அஸ்ட்ரோ அவானி அறிக்கையின்படி, அம்னோவின் லாபுவான் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஸ்மான் இஸ்லி அக்கட்சியிலிருந்து நாளை விலகப் போகிறார். அந்த அறிக்கையின்படி ரோஸ்மான் பார்டி வாரிசான் சாபாவில் இணையக்கூடும். இதை ரோஸ்மான் உறுதிப்படுத்தவோ மறுக்கவோ இல்லை. ஆனால் தாம் ஏராளமாகச் சொல்ல வேண்டியிருக்கிறது என்றார். நாளை நான் ஓர்…

நிதி அமைச்சர் ‘சொத்துகளை விற்பதில் வில்லாதி வீரர்’-முன்னாள் நிதி அமைச்சர்…

சொத்துகளை விற்பதென்றால் வேகமாக செயல்படுவாராம் நிதி அமைச்சர் லிம் குவான் எங். முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கிண்டலடித்துள்ளார். ஆனாலும், டிஏபி தலைமைச் செயலாளரான குவான் எங்கிடம் சொத்துகளை விற்பதில் “கெட்டிக்காரத்தனம் இல்லை” என்று நஜிப் குறிப்பிட்டார். “லிம் பினாங்கு முதலமைச்சராக இருந்தபோது ஒவ்வோராண்டும் உபரி பட்ஜெட்டைக்…

கிட் சியாங்: அடக்குமுறைச் சட்டங்களைத் தற்காலிகமாக நிறுத்தி வைக்கலாம்

அடக்குமுறைச் சட்டங்கள் பயன்படுத்தப்படுவதை இடைக்காலத்துக்கு நிறுத்திவைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுப்போர் வரிசையில் டிஏபி இஸ்கண்டர் புத்ரி எம்பி லிம் கிட் சியாங்கும் சேர்ந்து கொண்டிருக்கிறார். போலீஸ் அரசு-ஆதரவு சமூக ஆர்வலர்கள்மீதும் எதிரணி உறுப்பினர்கள்மீதும் தேச நிந்தனைச் சட்டத்தைப் பயன்படுத்தி வருவதைத் தொடர்ந்து அவர் இவ்வாறு வலியுறுத்தினார். “அடக்குமுறைச்…

வான் அசிசா: பிரதமர் பதவி  தேடி வந்தது

மே 9 பொதுத் தேர்தலில் பக்கத்தான் ஹரப்பான் வெற்றி பெற்றதை அடுத்து பிரதமர் பதவி தம்மைத் தேடி வந்ததாக துணைப் பிரதமர் டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயில் கூறினார். நேற்றிரவு ஜாகார்த்தாவில் அங்கு வாழும் சுமார் 200 மலேசியர்கள் அடங்கிய கூட்டத்தில் வான் அசிசா அந்தத் தகவலை…

மகாதிர்: சில சட்டங்கள் நியாயமற்றவை, ஆனால் சட்டமாக இருக்கும் வரையில்…

  சில சட்டங்கள் நியாயமற்றதாக இருக்கலாம், அவை திருத்தப்பட வேண்டும் அல்லது அகற்றப்பட வேண்டும் என்பதை ஒப்புக்கொண்ட பிரதமர் மகாதிர், அவை சட்டப் புத்தகத்தில் இருக்கும் வரையில் அச்சட்டங்கள் நிலைநிறுத்தப்பட வேண்டும் என்றார். சட்டம் மக்களுக்கு, அரச குடும்பத்திற்கு மற்றும் அரசாங்கத்திற்கு நியாயமானதாக இருக்க வேண்டும் - ஆனால்,…

பிடி-யில் மலாய் வாக்காளர்கள் வாக்களிக்கும் கடமையைத் தவறாமல் செய்ய வேண்டும்:…

போர்ட் டிக்சன் அம்னோ தலைவர் முகம்மட் பைசல் ரம்லி, அத்தொகுதியில் உள்ள மலாய் வாக்காளர்கள், அதிலும் குறிப்பாக அம்னோவின் 13,000 கட்சி உறுப்பினர்கள், வரும் சனிக்கிழமை அவசியம் வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். “நாங்கள் முன்பே கூறியுள்ளோம் போர்ட் டிக்சனில் வாக்காளராக பதிந்து கொண்டுள்ள எவரும் வாக்களிப்பதை அம்னோ/பிஎன்…

மேலும் விசாரிக்கப்படுவதற்காக ஸாகிட் எம்எசிசிக்கு வந்தார்

  மூன்றாவது முறையாக மேலும் விசாரிக்கப்படுவதற்காக அம்னோ தலைவர் அஹமட் ஹாசிட் ஹமிடி மலேசிய ஊழல் எதிர்ப்பு ஆணையத்திற்கு (எம்எசிசி) இன்று வந்தார். காலை மணி 9.20 அளவில் அங்கு வந்த நேர்ந்த அவரை பத்து நிமிடங்களுக்குப் பின்னர் எம்எசிசி அதிகாரிகள் உள்ளே அழைத்துச் சென்றனர். யாயாசான் அகல்…