நிலவில் கால்பதித்த முதல் மனிதரான நீல் ஆம்ஸ்டிராங் காலமானார்

வாஷிங்டன்: முதன் முதலில் நிலவில் கால்பதித்தவர் என்ற பெருமை கொண்டிருந்த அமெரிக்க விஞ்ஞானி நீல் ஆம்ஸ்ட்ராங் தனது 82-வது வயதில் காலமானார். கடந்த 5-ம்தேதி தன்னுடைய பிறந்த நாளை கொண்டாடிய அவர் சில தினங்களுக்கு முன்னர் இருதய அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். உடல் நல குறைவு காரணமாக…

தமிழர்களே நம்பிக்கையோடு இருங்கள்: ஐ.நா-வுக்கான ஜப்பானிய தூதுவர்

இலங்கை அரசாங்கம் போரில் வெற்றி பெற்றிருந்தாலும் அவர்களால் சமாதானத்தை கொண்டுவருவதென்பது இலகுவான விடயமல்ல; தமிழ் மக்கள் நம்பிக்கை இழக்காமல் இருக்க வேண்டும் என ஜப்பானிய விசேட தூதுவர் யசூசி அகாசி தெரிவித்தார். இலங்கை தமிழ் மக்களிற்கான அரசியல் தீர்வு விடயத்தில் இலங்கை அரசாங்கத்திடம் எவ்விதமான முன்னேற்றமும் ஏற்படாவிட்டாலும்அனைத்துலக சமூகம்…

இலங்கையை குறி வைக்கும் இந்திய ஏவுகணைகள்?

டெல்லி: இலங்கை மீது தாக்குதல் நடத்த இந்திய ஏவுகணைகளை தயார் செய்து வைத்துள்ளதாக, இலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதற்கு இந்திய பாதுகாப்பு அதிகாரிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர். இலங்கை ராணுவத்தினருக்கு தமிழகத்தில் பயிற்சி அளிப்பதை நிறுத்த வேண்டும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா, இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு…

நோர்வே: 77 பேரைக் கொன்றவருக்கு 21 ஆண்டுகள் சிறை

நோர்வேயில் கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் 77 பேரை சுட்டுக் கொன்ற அந்துர்ஸ் பெஹ்ரிங் பிரெய்விக்குக்கு மனநலம் பாதிக்கப்பட்டிருக்கவில்லை எனக் கூறியுள்ள நோர்வே நீதிமன்றம் அவருக்கு 21 ஆண்டு கால சிறை தண்டனையை விதித்துள்ளது. பிரெய்விக் மனநலம் சரியில்லாதவர் என்று நீதிமன்றம் தீர்பளிக்க வேண்டும் என்று அரச தரப்பு கோரியது.…

அதிகாரம் படைத்தவர் பட்டியல்: சோனியா காந்திக்கு 6-வது இடம்

நியூயார்க்:  அமெரிக்காவை சேர்ந்த போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள உலகின் அங்கீகாரம் படைத்த 100 பெண்மணிகள் பட்டியலில் இந்தியாவின் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவர் சோனியா காந்தி 6 வது இடத்தையும், ஜெர்மனி நாட்டின் பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல் முதலிடத்தையும் பிடித்துள்ளனர். போர்ப்ஸ் பத்திரிகை ஒவ்வோர் ஆண்டும் உலகின் அதிகாரம்…

ரசாயன ஆயுதங்களை பயன்படுத்தினால் சிரியா மீது போர்: ஒபாமா

வாஷிங்டன்: ரசாயன ஆயுதங்களை பயன்படுத்தினால் சிரியா மீது போர் தொடுப்போம் என்று அமெரிக்க அதிபர் ஒபாமா எச்சரிக்கை விடுத்துள்ளார்.  சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத்திற்கு எதிராக பொதுமக்கள் போராடி வருகின்றனர். அந்த நாட்டு ராணுவத்தால் அப்பாவி மக்கள் சுட்டுக் கொல்லப்பட்டு வருகிறார்கள். 17 மாதங்களாக நடைபெறும் இந்த…

யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினர் மீது இனந்தெரியாத குழு தாக்குதல்

இலங்கையின் வடக்கே யாழ்ப்பாணம் கொட்டடிப் பகுதியில் வைத்து இலங்கை விசேட அதிரடிப் படையினர் மீது இனந்தெரியாத குழுவொன்று தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நேற்று இரவு அதிகாலை 1 மணியளவிலேயே விசேட அதிரடிப் படையினர் மீது இத்தாக்குதல் இடம்பெற்றுள்ளதாகத் யாழ்ப்பாண காவல்துறையினர் தெரிவித்தனர். சந்தேகத்துக்குரிய குழுவினரை கைது செய்வதற்காக சென்ற போதே படையினர் மீது…

இலங்கை தூதரகத்தை அப்புறப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபடுவோம் : வேல்முருகன்

"தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துவது என்பதை நாள்தோறும் மேற்கொள்ளும் ரோந்து நடவடிக்கையைப்போல் செய்து வருகிறது சிங்கள கடற்படை" என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலுக்கு ஒரே தீர்வு கச்சத்தீவை மீட்பதுதான். இல்லையேல், தமிழக மீனவர்கள் தங்களைத்…

வறட்சியால் இலங்கையின் வடக்கே ஆயிரக் கணக்கான மக்கள் பாதிப்பு

வட இலங்கையில் ஒருபோதும் இல்லாத வகையில் இந்த ஆண்டு ஏற்பட்டுள்ள கடும் வறட்சி காரணமாக வவுனியா, மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் கிட்டத்தட்ட 30 ஆயிரம் குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர். நீர்நிலைகள் வறண்டு காணப்படுவதால் மக்கள் தண்ணீருக்காக தூர இடங்களுக்கு அலைய நேரிட்டிருக்கின்றது. வறட்சியினால் பாதிக்கப்பட்ட…

கூடுதலான அகதிகளை ஏற்றுக் கொள்ள ஆஸ்திரேலியா முடிவு

ஆஸ்திரேலியா ஒவ்வொரு ஆண்டும் கூடுதலாக 40 வீதம் அகதிகளைஏற்றுக் கொள்ளும் என்று அந்நாட்டு பிரதமர் ஜூலியா கிலார்ட் அறிவித்துள்ளார். உள்வாங்கும் அகதிகளின் எண்ணிக்கையை 13,500-இலிருந்து 20,000 ஆக அதிகரிக்க எடுக்கப்பட்டுள்ள முடிவு மற்றும் தஞ்சம் கோருபவர்களை தொலைதூர பசிபிக் தீவுகளில் உள்ள தடுப்பு முகாம்களில் தங்க வைக்கும் நடவடிக்கை…

தேர்தல் பிரச்சாரத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் மீது தாக்குதல்

மட்டக்களப்பு: இலங்கையில் தேர்தல் பிரச்சாரத்திற்காகச் சென்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையில் கிழக்கு மாநில சட்ட மன்றத் தேர்தல் நடக்கவிருக்கிறது. இதையொட்டி மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனையில் தேர்தல் பிரச்சாரம் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின்…

இலங்கை தமிழர் பிரச்சினையில் தி.மு.க. இரட்டை வேடம்!

இலங்கையில் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதற்கு ஊன்று கோலாகவும் உறுதுணையாகவும் இருந்தது மத்தியில் ஆளும் காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி அரசுதான். தமிழக மீனவர்கள் தொடர்ந்து இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவதை தடுக்கத் தவறுவதும் இதே அரசுதான். இலங்கை கடற்படையை கண்டித்து இதுவரை தி.மு.க. காங்கிரஸ் கூட்டணி அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என…

தமிழீழம் அழியவில்லை அது அங்குதான் உள்ளது; கூறியது தமிழர் அல்ல…

தமிழீழம் அழியவில்லை. அது அங்குதான் உள்ளது. அது தற்போது இலங்கை இராணுவத்தினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது எனவும் இப்போதும் தமிழ் மக்கள் தமிழீழக் கனவோடுதான் இன்னமும் வாழ்கின்றனர் என சிங்களவராக இருந்துகொண்டு தமிழர்களுக்காக குரல் கொடுத்து வரும் புதிய இடதுசாரி முன்னணியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரட்ண தெரிவித்துள்ளார். தமிழர்களுக்கான சுய உரிமையோடு…

தேசியப் பள்ளிகளில் தமிழை கட்டாயமாக்குவது நம் கண்களை நாமே குருடாக்குவதாகும்!

அண்மையில், "தேசியப் பள்ளிகளில் தமிழ்மொழி கட்டாயப் பாடமாக்கப்பட வேண்டும்" என்ற கருத்து Read More

சிரியாவை தாக்குவோம்: அமெரிக்க மிரட்டலுக்கு ரஷியா எச்சரிக்கை

மாஸ்கோ : சிரியா நாட்டில் அதிபர் ஆசாத்துக்கும் போராளிகளுக்கும் இடையே நடக்கும் சண்டையில் இதுவரை 18,000 பேர்  இறந்துள்ளதாக ஐ.நா.சபை குற்றம் சாட்டிவருகிறது. சிரியா போராளிகளுக்கு எதிராக ரசாயன ஆயுதங்களை பயன்படுத்தகூடாது, மீறி பயன்படித்தினால் அமெரிக்கா தாக்குதல் நடத்தும் என்று எச்சரித்தது. இந்நிலையில் நேற்று ரஷிய தலைநகர் மாஸ்கோவில்…

புத்தரை முத்தமிட்ட மூவர் இலங்கையில் கைது

புத்தர் சிலையை இழிவுபடுத்தும் விதமான புகைப்படங்களை எடுத்ததன் மூலம் பௌத்தர்களின் மத உணர்வுகளை புண்படுத்தியதாகக் குற்றம்சாட்டி பிரஞ்சு சுற்றுலாப் பயணிகள் மூன்று பேருக்கு இலங்கை நீதிமன்றம் ஒன்று நிறுத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனைகளை விதித்துள்ளது. இந்த சுற்றுலாப் பயணிகள் தாங்கள் எடுத்த படங்களை ஒரு கடையில் அச்சிடக் கொடுக்கப்போனபோது அக்கடை…

ஸ்ரீமுருகன் நிலையத்தால் புரட்சியா அல்லது வறட்சியா?

கந்தன்: கோமாளி, ஸ்ரீமுருகன் நிலையத்தால் இந்திய சமூகத்திற்கு புரட்சியா அல்லது வறட்சியா? கோமாளி: கந்தா! என்ன கேள்வி இது, சுட்ட பழம் வேணுமா? சுடாத பழம் வேணுமா? என்று ஒளவையை கேட்ட மாதிரி உள்ளது உன் கேள்வி! நான் புரட்சி என்றால், அப்புறம் ஏன் இன்ட்ராப் என்பாய், வறட்சி…

2012-ன் உலக அழகியாக சீன மாணவி தேர்வு; இந்தியாவுக்கு ஏமாற்றம்!

பீய்ஜிங்: சீனா தலைநகர் பெய்ஜிங்கில் தோங்க்செங் என்னுமிடத்திலுள்ள உடற்பயிற்சி மைதான அரங்கில் நேற்று உலக அழகி போட்டி நடைபெற்றது. உலகிலுள்ள பல நாட்டு அழகிகள் கலந்து கொண்ட இப்போட்டியில் இந்தியா சார்பாக வண்யா மிஸ்ரா என்ற அழகியும் கலந்து கொண்டார். பல்வேறு சுற்றுகளாக நடந்த இப்போட்டியில் இறுதியாக சீன…

கடலில் தத்தளித்த மாணவியை மீட்ட பிரிட்டிஷ் இளவரசர் வில்லியம்

லண்டன் : கடலில் தத்தளித்த மாணவியை பிரிட்டிஷ் இளவரசர் வில்லியம் காப்பாற்றியுள்ளார்.பிரிட்டனில் ஆங்கில்சே தீவில், விடுமுறையை கழிக்க வந்த ஒரு குடும்பத்தினர் கடலில் குளித்து கொண்டிருந்தனர். இதில், 13 வயது பெண் திடீரென அலையில் அடித்து செல்லப்பட்டாள். இவளது, 16 வயது சகோதரி தன்னுடைய தங்கையை காப்பாற்ற கடலுக்குள்…

எதிர்க்கட்சியுடன் கூட்டணி சேர்ந்தால் ஆட்சியை கைப்பற்றலாம் :TNA

இலங்கையின் கிழக்கு மாநில சட்டமன்ற தேர்தலில் இலங்கையின் எதிர்க்கட்சியான ஐ.தே.கவுடன் இணைந்து ஆட்சி அமைக்க முடியும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். இலங்கையின் கிழக்கே திருகோணமலையில் தமிழ் அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் நடத்திய கலந்துரையாடல் ஒன்றிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். "கிழக்கு மாநில சட்டமன்ற…

ஈழத்தை இலங்கையில் உருவாக்கமுடியாது என்கிறார் சிங்கள இனவாதி

உலகத்தில் எந்த இடத்தில் ஈழம் தொடர்பாக மாநாடுகளை நடத்தினாலும் இலங்கையில் ஈழம் என்றொரு நாட்டை உருவாக்குவது என்பது வெறும் கனவில் மாத்திரமே முடியும் என இலங்கையின் ஜாதிக யஹல உறுமய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எல்லாவெல மேதானந்த தேரர் தெரிவித்துள்ளார். நாட்டுக்குள் இருந்து கொண்டு நாட்டுக்கு துரோகம் இழைக்கும்…