அக்கறை உள்ளவர்களை ஆட்சிக்கு அனுப்புங்கள்; ஆட்டிறைச்சி கொடுப்பவர்களை வீட்டுக்கு அனுப்புங்கள்

இந்நாட்டில் நடப்பவை, உலகில் நடப்பவை, அரசியல் மாற்றங்கள், பொது அறிவு போன்ற பல விடயங்களில் இந்நாட்டில் வாழும் மற்ற இனங்கள் காட்டும் அக்கறையிலும் ஆர்வத்திலும் சிறிதும்கூட நம்மில் பெரும்பாலானவர்களுக்கு இல்லை என்பதே இன்றைய உண்மை. உரிமை உரிமை என கத்திவிட்டு உறங்கிக் கொண்டிருக்கும் நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்…

இலவசத் தொழில் கல்வி : வாய்ப்புக்களை பயன்படுத்திக் கொள்ளுங்கள்!

நமது இளைஞர்களுக்கும் மற்றும் மாணவ மாணவிகளுக்கும் கடந்த காலங்களில் கிடைக்காத சில அரிய தொழில் கல்வி இலவசமாக வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதுகுறித்த தகவல் கிழே தரப்பட்டுள்ளது. வரும் பொதுத் தேர்தலில் தேசிய முன்னணி அரசாங்கம் தனது வெற்றியை இந்த பயிற்சிகளை இலவசமாக அளித்து வாக்குகளை பெற முயல்கிறது. ஆனாலும்…

ஆந்திராவில் ‘நிலம்’ புயல் : இதுவரை 22 பேர் பலி;…

ஐதராபாத்: ஆந்திராவில் நிலம் புயல் காரணமாக பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கடந்த 4 நாட்களில் அங்கு 22 பேர் பலியாகியுள்ளனர். சுமார் 60 ஆயிரம் பாதுகாப்பான இடங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். வங்கக்கடலில் உருவான நீலம் புயல் கடந்த 31ம் தேதி, மாமல்லபுரம் அருகே கரையை கடந்தது.…

வட மாநில முதலமைச்சர் பதவிக்கு கேபி- டக்ளஸ் தேவானந்தா போட்டி?

யாழ்ப்பாணம்: இலங்கையின் வடக்கு மாநிலத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக இலங்கை அரசுத் தரப்பில் தமிழீழ விடுதலைப் புலிகளின் பன்னாட்டு பொறுப்பாளராக இருந்த கேபியும் தற்போது அமைச்சராக உள்ள ஈபிடிபியின் டக்ளஸ் தேவானந்தாவும் போட்டியிடக் கூடும் எனத் தெரிகிறது. இலங்கையின் வடக்கு  மாநில சட்டமன்ற தேர்தலை…

இந்தியாவில் குடித்த அமுத பானமே ஆயுளின் ரகசியம் என்கிறார் 110…

பிரிட்டனின் மிகவும் வயதுகூடிய நபரான ரெக் டீன் ஞாயிறன்று தனது நூற்று பத்தாவது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். இவர் இளைஞராக இருந்தபோது இந்தியாவில் இவருக்கு கொடுக்கப்பட்ட ஒரு விநோத அமுத பானம்தான் அவருடைய நீண்ட ஆயுளின் ரகசியம் என்று தாங்கள் நினைப்பதாக ரெக் டீனின் மகன் கிறிஸ்டோஃபர் கூறினார்.…

சொந்த இருப்பிடங்களில் குடியமர்த்தக் கோரி வழக்கு தாக்கல்

கேப்பாப்பிலவு மக்களை தமது சொந்த இருப்பிடங்களில் குடியமர்த்தக் கோரி வழக்கு தாக்கல் செய்யப்போவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். மீள்குடியேற்றப் போவதாக அழைத்துச் சென்று, முல்லைத்தீவு மாவட்டம் சீனியாமோட்டையில் (வேறிடத்தில்) குடியேற்றப்பட்டுள்ள கேப்பாப்பிலவு பகுதி மக்களுக்கு நிரந்தர வீடுகளைக் கட்டிக் கொடுப்பதற்காக இலங்கை…

அமெரிக்க அதிபர் தேர்தல்: போர்க்கள மாநிலங்களில் இறுதிக்கட்டப் பிரச்சாரம்

அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்குப்பதிவுக்கு இன்னும் ஒரு நாள் இருக்கும் நிலையில், பிரதான கட்சிகளின் இரு வேட்பாளர்களான, பராக் ஒபாமாவும், மிட் ரோம்னியும் அமெரிக்காவின் ஸ்விங் ஸ்டேட்ஸ் எனப்படும் போர்க்கள மாநிலங்களில் கடைசி நேர சூறாவளி பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். நேற்று முன்தினம் சனிக்கிழமை பின்னிரவில், அதிபர் ஒபாமாவும்,…

ஒபாமா அதிபரானால்… இலங்கைத் தமிழர்களுக்கு என்ன மாற்றம் வரும்?

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் ஒபாமாவுக்கு சாதகமாக அமைந்தால் இலங்கைத் தமிழர்கள் வாழ்க்கையில் எத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்துமா அல்லது ஏதாவது முன்னேற்றம் வருமா என்ற கேள்வி எழுந்துள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகள் ஒடுக்கப்பட்ட நிலையில், சீனாவுடன் மிகவும் நெருக்கம் காட்டி இந்தியாவுக்கு மறைமுக நெருக்கடியை இலங்கை கொடுத்து…

சாண்டி புயலை வைத்து சர்ச்சைப் புயலைக் கிளப்பிய கவர்ச்சி மாடல்

நியூயார்க்: பிரேசில் நாட்டைச் சேர்ந்த கவர்ச்சி மாடல் அழகி நானா கோவியா, சாண்டி புயலால் சீரழிந்து போன நியூயார்க் நகரில், சேதத்திற்கு மத்தியில் நின்று போஸ் கொடுத்து அதை பேஸ்புக்கில் போட்டு புதிய சர்ச்சையைக் கிளப்பியுள்ளார். அமெரிக்காவே சோகத்தில் மூழ்கிக் கிடக்கும்போது இப்படியா அதை வைத்து விளம்பரம் தேடிக்கொள்வது…

தலைமை நீதியரசர் விவகாரம்: இலங்கை அரசின் நடவடிக்கையில் சந்தேகம்

இலங்கையின் உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ஷிராணி பண்டாரநாயக்கவை பதவி நீக்கம் செய்வதற்கான கண்டனத் தீர்மானத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை இலங்கை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும் என்று ஃப்ரீ மார்ச் என்ற சட்டத்தரணிகளின் அமைப்பொன்று கோரிக்கை விடுத்துள்ளது. தலைமை நீதிபதிக்கு எதிராக முன்வைக்கப்படுகின்ற குற்றச்சாட்டுக்களை இலங்கை அரசாங்கம் வெளிப்படுத்தாமல் இருக்கின்றமை, அந்த…

கோவிலுக்குச் செலுத்தும் கவனத்தை தமிழ்ப்பள்ளிக்குச் செலுத்தினால் என்ன?

அடியேனும் தெய்வ பக்தி உள்ளவன்தான். ஆனால் இன்று ஆலயம்/ சமயம் என்ற பெயரில் சொந்த சமூகத்தையே சுரண்டி தின்னும் செயலை அதிகரிக்க இன்னும் எத்தனை பேர் கிளம்பிவிட்டார்கள் என்று தெரியவில்லை. இந்து ஆலயங்களில் பல குழுக்கள்; அரசு சீல் வைக்கும் அளவிற்கு ( பேரா கந்தன் மலை கோவில்…

‘நிலம்’ புயலை பயன்படுத்திக் கொண்ட திரைப்பட இயக்குநர் மணிரத்னம்

சென்னை: வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்பது இதுதான் போல, கடல் படத்தை இயக்கி வரும் இயக்குநர் மணிரத்னம், 'நிலம்' புயலை பயன்படுத்தி சில முக்கிய காட்சிகளை எடுத்துள்ளார். கடந்த புதனன்று வங்கக் கடலில் உருவான 'நிலம்' புயல் காரணமாக, தமிழகத்தின் கடற்கரையோரப் பகுதிகளே அல்லோலகல்லோலப் பட்டது. ஆனால், புயல்…

தலைமை நீதிபதி மீது நம்பிக்கையில்லா தீர்மானம் தேவையில்லை: அமெரிக்கா

இலங்கை தலைமை நீதிபதி மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர வேண்டாம் என இலங்கைக்கு அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. இலங்கை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருப்பவர் ஷிராணி பண்டாரநாயகே (வயது 54). இவர் இலங்கையின் முதல் பெண் நீதிபதியாவார். இவர் மீது தனது அதிகார வரம்பை மீறியது, முறையற்ற நடவடிக்கைகளில்…

தபாலில் வந்த மலைப்பாம்புகள்; ஊழியர்கள் அலறியடித்து ஓட்டம்!

ஜோகன்னஸ்பர்க்: தபால் பொதியில் அனுப்பப்பட்ட மலைப்பாம்பை கண்டு, தபால் ஊழியர்கள் அலறியடித்து ஓடிய சம்பவம் ஒன்று தென் ஆப்ரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் அருகே உள்ள சபி நகரத்தில் இடம்பெற்றுள்ளது. சபி நகரத்திலுள்ள தபால் அலுவலகத்திற்கு வந்த தபால்பொதிகளை, ஊழியர்கள் தனித்தனியாக பிரித்து கொண்டிருந்தனர். வந்த தபால்பொதிகளுக்கு நடுவே, வெள்ளை மலைப்பாம்பு…

சிரியா: அரச படையினரை கிளர்ச்சிக்காரர்கள் கொல்வதாகக் காட்டும் வீடியோ

சிரியாவின் வடக்கே அரச படையினரின் சோதனைச் சாவடி ஒன்றைத் தாக்கி அங்கிருந்தவர்களைப் பிடித்த கிளர்ச்சிக்காரர்கள், அரச படைச் சிப்பாய்கள் ஒரு டஜன் பேரை அதே இடத்தில் கேள்விக் கணக்கின்றி கொல்வதாகக் காட்டும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. கொதிப்படைந்து காணப்படும் துப்பாக்கிதாரிகள் 'அல்லாஹு அக்பர்' என்று கோஷமிட்டபடி, தரையில்…

இலங்கை மனித உரிமை நிலை குறித்து ஐநாவில் விவாதம்

ஐக்கிய நாடுகள் சபையில் மனித உரிமைகள் பேரவையில் வியாழக்கிழமையன்று ஆரம்பித்த 'யுனிவர்சல் பிரியாடிக் ரெவ்யூ' என்ற பொறிமுறையின் கீழான இலங்கை குறித்த விவாதத்தின் துவக்கத்தில் இலங்கை அமைச்சர் மஹிந்த சமரங்க இலங்கை அரசு மனித உரிமைகளை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகத் தெரிவித்தார். இலங்கைக்கு உள்ளேயும் வெளியேயும் சில…

ஒருவர் மட்டுமே நடிக்கும் தமிழ் படம்!

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இருவர் மட்டுமே நடித்து ஒரு படம் தமிழில் வெளிவந்தது. வெளிவந்த வேகத்திலேயே பெட்யெில் சுருண்டது. நடுக் காட்டில் ஒரு சைக்கோவிடம் மாட்டிக் கொள்ளும் ஒரு பெண்ணின் கதைதான் அது. இப்போது ஒருவர் மட்டுமே நடிக்கும் படம் ஒன்று தயாராகி வருகிறது. படத்தின் பெயர்…

இலங்கை விவகாரம் குறித்து சர்வதேச சமூகம் கூடுதல் கவனம் செலுத்தவில்லை:…

இலங்கை விவகாரம் தொடர்பில் சர்வதேச சமூகம் கூடுதல் கவனம் செலுத்தத் தவறியுள்ளதாக சூடான் குற்றம் சுமத்தியுள்ளது. இலங்கையில் இடம்பெற்ற ஆயுத முரண்பாடு வருந்தத்தக்கது எனவும் அதற்காக அனுதாபப்படுவதாகவும் ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கான சூடான் பிரதிநிதி அலி ஒஸ்மான் தெரிவித்துள்ளார். சூடானில் இடம்பெற்ற ஆயுதப் போராட்டம் தொடர்பில் சர்வதேச குற்றவியல்…

சரக்குக் கப்பலை இலங்கை கடற்பரப்பில் மூழ்கடித்த நிலாம் புயல்!

கொழும்பு: மியான்மரிலிருந்து இந்தியா நோக்கி வந்த சரக்குக் கப்பல் நிலாம் புயலில் சிக்கி இலங்கை கடற்பரப்பில் மூழ்கி விபத்துக்குள்ளானது. கப்பலில் பயணித்த 22 பேரில் 18 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். மேலும் 4 பேரின் கதி என்ன என்று தெரியவில்லை. வியட்னாம் நாட்டுக்கு சொந்தமானது சாய்கோயின் குயின் என்ற…

மலேசியாவில் தஞ்சம் அடைய வந்த மியன்மார் படகு கவிழ்ந்தது; 130…

டாக்கா: மியான்மரில் இருந்து மலேசியாவுக்கு தஞ்சம் அடைய படகில் வந்தபோது வங்கதேச கடற்பரப்பில் மாயமான 130 பேரை அந்நாட்டு கடலோரக் காவல்படை தேடி வருகிறது. மியான்மரில் குடியேறிய வங்கதேச நாட்டவர் தங்களுக்கும் குடியுரிமை கோருகின்றனர். ஆனால் பூர்வகுடிகள் இதை கடுமையாக எதிர்க்கின்றனர். இதனால் இருதரப்புக்கும் இடையே தொடர் மோதல்கள்…

உலகப் பொருளாதார நெருக்கடியில் இந்தியாவும் சிக்கிக் கொண்டது!

டெல்லி: உலகப் பொருளாதார நெருக்கடியில் இந்தியாவும் சிக்கிக் கொண்டு தவிக்கிறது என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறினார். இந்திய மத்திய அமைச்சரபை மாற்றத்துக்கு பிறகு முதன்முறையாக இன்று புதுடெல்லியில் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் இந்திய மத்திய நிதி அமைச்சர் ப.…

ஐ.நா. துணைப் பொதுச்செயலாளரிடம் டெசோ தீர்மானம் வழங்கப்பட்டது

நியூயார்க்: திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், நியூயார்க் நகரில் ஐ.நா. சபை துணைப் பொதுச்செயலாளரை சந்தித்து ‘டெசோ' மாநாட்டு தீர்மானங்களை வழங்கினார். சென்னையில் நடைபெற்ற ‘டெசோ' மாநாட்டின் தீர்மானங்களையும், ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை கவுன்சிலில் வழங்கப்பட உள்ள மனுவினையும், கருணாநிதி சார்பில் பொருளாளர் மு.க.ஸ்டாலின், நாடாளுமன்ற தி.மு.க.…

தமிழனே தலைகுனியாதே… (ஓவியா)

தமிழர்கள் அனைவரினதும் உணர்வுகளை தட்டியெழுப்பும் 'தமிழனே தலைகுனியாதே...', என்ற கவிதை வரிகளுக்கு உயிர்கொடுத்துள்ள தமிழ்ப்பள்ளி ஆசிரியையும் வளர்ந்து வரும் இளம் கவிதாயினியுமான செல்வி. வாணி உமாபதிக்கு, ஊக்கமும் உற்சாகமும் அளிக்க உங்கள் கருத்துகளை பதிவு செய்யுங்கள்.  [இது போன்ற ஆக்கங்களை எழுதி அனுப்ப விரும்புவோர்  [email protected] என்ற மின்னஞ்சல்…